ஆப்நகரம்

விஜய் சேதுபதியை ’மகா நடிகன்’ என்று பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

‘பேட்ட’ இசை வெளியீட்டு விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை, ஒரு ’மகா நடிகன்’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிப் பேசியுள்ளார்.

Samayam Tamil 10 Dec 2018, 1:59 pm
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜித்து என்ற கேரக்டரில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
Samayam Tamil petta


இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ‘‘ நம்ம படத்தில் வில்லன் கேரக்டர் யார் பண்ணுறாங்கன்னு கார்த்திக் சுப்புராஜ்கிட்ட கேட்டேன். அவர் விஜய் சேதுபதி பெயரை சொன்னார். அவர் இதற்கு சம்மதிப்பாரா என்றேன்.

அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாக கார்த்திக் கூறினார் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த பிறகு தான் தெரிந்தது அவர் சாதாரண நடிகன் இல்லை ஒரு மகா நடிகன் என்று. விஜய் சேதுபதி நல்ல நடிகன் மட்டுமில்ல. நல்ல மனிதனும் கூட. அவரோட பழகும்போதுதான் அவரோட நல்ல மனசு தெரிஞ்சுது. அவரோட பேச்சு, சிந்தனை, செயல் எல்லாமே வித்தியாசமா இருக்கு’’ என்றார் ரஜினிகாந்த்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்