ஆப்நகரம்

விஜய்சேதுபதியை கடவுளாக நினைக்கும் பிரபல இசையமைப்பாளர்!

பிரபல இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யா, விஜய் சேதுபதியை நான் கடவுளாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 9 Jan 2019, 3:40 pm
நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அவரைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வருடத்திற்கு ஏராளமான படங்களில் நடித்து வரும் நடிகரும் கூட. அவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் சில படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார்.
Samayam Tamil rajesh-vaidhya


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘பேட்ட’ படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரிடம் உதவி என்று வருபவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பவர்.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்யா கூறுகையில், ‘‘விஜய் சேதுபதி மட்டும் தான். என்ன ஒரு அடக்கம். சிறந்த மனிதர், நான் அவரை கடவுளாக பார்க்கிறேன்’’ என புகழ்ந்து கூறியுள்ளார். ராஜேஷ் வைத்யா பல பாடல்களுக்கு வீணை இசை அமைத்து கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்