ஆப்நகரம்

அரசியலில் குதிக்கும் விஜய் சேதுபதி; மாமனிதனாக புதிய அவதாரம்

மாமனிதனாக நடிகர் விஜய் சேதுபதி அரசியலில் குதிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

TNN 23 May 2017, 7:55 pm
சென்னை: மாமனிதனாக நடிகர் விஜய் சேதுபதி அரசியலில் குதிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil vijay sethupathi likely to play a politician in mamanithan
அரசியலில் குதிக்கும் விஜய் சேதுபதி; மாமனிதனாக புதிய அவதாரம்


கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதையடுத்து 4வது முறையாக விஜய் சேதுபதி, சீனு ராமசாமி கூட்டு சேரவுள்ளனர். இப்படத்திற்கு மாமனிதன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் கதை முழுமையாக நிறைவடையவில்லை எனினும், கதைக்கரு தன்னை கவர்ந்ததால் நடிக்க தயாராகிவிட்டதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் 2வது பாதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தொடக்கத்தில் சீனு ராமசாமி உடன் நடிக்க தயங்கினார். ஆனால் அவர்களது முதல் படமான தென்மேற்கு பருவக் காற்று தேசிய விருதை வென்றது. இதையடுத்து இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களில் கூட்டு சேர்ந்தனர். அதில் இடம் பொருள் ஏவல் படம் வெளியாவதில் உள்ள சிக்கல் இன்னும் தீரவில்லை. இதற்கிடையில் விஜய் சேதுபதி தனது 25வது படத்திற்காக, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநருடன் இணைந்துள்ளார். நடப்பாண்டில் மட்டும் விக்ரம் வேதா, 96, கருப்பன் ஆகிய படங்கள் விஜய் சேதுபதி கையில் உள்ளன.

Vijay Sethupathi likely to play a politician in Mamanithan.

அடுத்த செய்தி

டிரெண்டிங்