ஆப்நகரம்

வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது குறித்து சுவாரஸ்யமாக பேசிய விஜய்சேதுபதி

விஜய் சேதுபதியின் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாக வெளிவந்த தகவல் குறித்து கேட்டதற்கு விஜய் சேதுபதி காமெடியாக சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.

Samayam Tamil 29 Sep 2018, 6:05 pm
சென்னை : வருமான வரித்துறையினர் விஜய் சேதுபதியின் வீட்டில் ரெய்டு நடத்தியதாக வெளிவந்த தகவல் குறித்து கேட்டதற்கு விஜய் சேதுபதி காமெடியாக சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
Samayam Tamil 96 movie


விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படம் வரும் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதில் விஜய் சேதுபதி 16,36,96 வயது கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்திற்கான சிறப்பு சந்திப்பு நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, த்ரிஷா செய்தியாளர்களின் பல கேள்விக்கு பதிலளித்தனர்.

வருமானவரி சோதனை நடந்ததா?
96 படம் குறித்து கேட்கப்பட்டதற்கு பின், அவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்ததாக தகவல்கள் வருகிறதே என்ன சொல்கிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “என் வீட்டில் ரெய்டு நடக்கவே இல்லை. என் மூஞ்சி அதிக படங்களிலே தெரிஞ்சுகிட்டே இருக்குல, அதனால நான் ஒழுங்கா இன்கம்டாக்ஸ் கட்டுரெனா, கிரிடிட், டெபிட் கணக்கு எல்லாம் சரியா எழுதிருக்கேனா என பாக்க வந்தாங்க.

எனக்கு இப்பதான் இன்கம்டாக்ஸ் துறை இருப்பது தெரியும். நான் எப்பதும் வருமானம் வருவதற்கு முன்னதாகவே வருமான வரியை கட்டி வருகின்றேன். அதை என் ஆடிட்டர் ரிட்டன் ஃபைல் பண்ணல. அதான் திடீர்ன்னு ஃபைல் பண்ணியிருக்கார். இதனால் ரெய்டுன்னு வதந்தி கிளம்பிருச்சு.” என்றார்.

ராஜா பாணியில் கிண்டல்:இப்பல்லாம் ஏதாவது பேசிட்டு நான் சொல்லவே இல்லை, என் அட்மின் பேசிட்டாரு. எனக்கு பதிலா மிமிக்ரி பண்ணிட்டாருன்னு சொல்றது தான் ட்ரெண்டிங்கா இருக்கு. அது போல் என் வீட்டில ரெய்டு நடக்கல, என் வீடு மாதிரி செட் போட்டு செக் பண்ணி இருக்கலாம் என விஜய் சேதுபதி கிண்டல் செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்