ஆப்நகரம்

3 கெட்டப்புகளில் தோன்றும் விஜய்சேதுபதி!!

விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் மூன்று வித்தியாசமான தாதா கெட்டப்புகளில் நடிக்க உள்ளார்.

TNN 19 Sep 2017, 2:54 pm
விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் மூன்று வித்தியாசமான தாதா கெட்டப்புகளில் நடிக்க உள்ளார்.
Samayam Tamil vijay sethupathi to don 3 different looks
3 கெட்டப்புகளில் தோன்றும் விஜய்சேதுபதி!!


எல்லா வயதினரையும் தனது வசீகர நடிப்பால் அடிமையாக்கியவர் விஜய் சேதுபதி . வித்தியாசமான கதைக் களம் , கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

அவர் திரைத்துறைக்குள் நுழைந்து 5 வருடங்கள்தான் ஆகிறது. ஆனால், 25 படங்களில் நடித்துவிட்டார். இதேபோல், குறுகிய காலத்தில் யாரும் அதிக அளவு படங்களை நடித்ததில்லை.

தற்போது விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்துள்ளது.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவர் மூன்று கெட்டப்புகளில் தோன்ற உள்ளார். 30, 50 மற்றும் 75 வயது தோற்றங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

75 வயது தோற்றத்தை வடிவமைக்க உலக புகழ்மிக்க மேக் ஆப் மேன் கிரக் கனோமை பணியாற்றுகிறார். இவர் பல ஹாலிவுட் படங்களில் மேக் ஆப் மேனாக பணியாற்றியுள்ளார் . ஷாருக்கானின் ஃபான் படதிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இதற்கு முன்பாக பெண் தோற்றத்தில் நம் மனதை கொள்ளை கொண்ட விஜய் சேதுபதி முதியவர் தோற்றதிலும் நம்மை மகிழ்விப்பார் என்பதில் சந்தேகமே இல்லை .

அடுத்த செய்தி

டிரெண்டிங்