ஆப்நகரம்

வெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகை வரலட்சுமி நடித்திருக்கும் வெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 10 Jun 2018, 2:59 pm
நடிகை வரலட்சுமி நடித்திருக்கும் வெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Samayam Tamil varu
வெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!


போடா போடி படம் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலெட்சுமி. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர், தற்போது வெல்வட் நகரம் என்ற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கும் இந்த படத்தை, அருண்கார்த்திக் தயாரிக்கிறார். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் வெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் நடிகை வரலெட்சுமி காட்சியளிக்கும் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்