ஆப்நகரம்

தயாரிப்பாளருக்கு 50 கோடியை சம்பாதித்து கொடுத்த விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ அதன் தயாரிப்பாளருக்கு ரூ. 50 கோடியை சம்பாதித்து கொடுததுள்ளது.

TOI Contributor 23 Aug 2017, 8:42 am
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ அதன் தயாரிப்பாளருக்கு ரூ. 50 கோடியை சம்பாதித்து கொடுததுள்ளது.
Samayam Tamil vijay sethupathi vikram vedha profit nearly 50 crores
தயாரிப்பாளருக்கு 50 கோடியை சம்பாதித்து கொடுத்த விஜய் சேதுபதி படம்!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் சுமார் ரூ.100 கோடி, 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. படம் நன்றாக இருந்தால் மட்டுமே தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுக்க முடியும். இல்லையென்றால் படத்தின் தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டு திரிய வேண்டியதுதான்.

இந்த நிலையில் சுமார் ரூ.10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.57 கோடி வசூல் செய்துவிட்டதாம். ‘விவேகம்’ ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.60 கோடியை எட்டிவிடும் என தெரிகிறது. எனவே இந்த படத்தின் லாபம் முழுதாக ரூ.50 கோடி என்று தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் கூறுகின்றனர்.
ஒரு படத்தின் உண்மையான வெற்றி இதுதான் என்றும், ரூ.100 கோடி பட்ஜெட்டில் படத்தை எடுத்து அந்தப் படம் ரூ.150 கோடி வசூல் செய்தாலும் இந்த வெற்றிக்கு ஈடாகாது என்றும் படக்குழுவினர் தைரியமாக கூறி வருகின்றனர்.

vijay sethupathi vikram vedha profit nearly 50 crores

அடுத்த செய்தி

டிரெண்டிங்