ஆப்நகரம்

ரசிகர்களின் மனதில் இடம்பெற ஆக்ஷனில் இறங்கும் விஜய் சேதுபதி!

கிராமப்புற ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க விஜய் சேதுபதி தற்போது ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

TOI Contributor 6 Oct 2016, 4:40 pm
கிராமப்புற ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க விஜய் சேதுபதி தற்போது ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
Samayam Tamil vijay sethupathi wants to do action film
ரசிகர்களின் மனதில் இடம்பெற ஆக்ஷனில் இறங்கும் விஜய் சேதுபதி!


நடிகர் விஜய் சேதுபதி அப்பாவித்தனமாகவும், ரவுடியாகவும், போலீஸாகவும், யதார்த்தமான நடிப்பு உள்ள மனிதனாகவும் பல படங்களில் தன் நடிப்பு அவதாரத்தை காட்டியுள்ளார். தற்போது அவருக்கு அதிரடி படங்களில் நடிக்க ஆர்வம் வந்துவிட்டது. தற்போது வெளியாகவிருக்கும் ‘றெக்க’ படத்தில் அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளாராம்.

விஜய் சேதுபதி இதுவுரை நகர்புற ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். மேலும் கிராமப்புறங்களில் உள்ள ரசிகர்களை கவர்வதற்கு ஆக்ஷனில் இறங்கினால்தான் முடியும் என்று ஒரு சிலர் ஐடியா சொல்லியுள்ளனர். ஆகையால் அடுத்து நடிக்கவிருக்கும் படங்களில் ஒரு சில சண்டைக் காட்சிகள் இருக்குமாறு கதை ரெடி பண்ணச் சொல்லி இயக்குனர்களுக்கு அன்பு கட்டளையிடுகிறார் விஜய் சேதுபதி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்