ஆப்நகரம்

ரசிகர்களை ஏமாற்றுவதில் விஜய் சேதுபதி கில்லாடி!

விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

TNN 13 Jul 2017, 6:01 pm
விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil vijay sethupathi who cheated fans
ரசிகர்களை ஏமாற்றுவதில் விஜய் சேதுபதி கில்லாடி!


இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘கருப்பன்’. இந்தப் படத்தின் நாயகியாக தன்யா நடித்து வருகிறார். படத்தில் விஜய்சேதுபதிக்கு எதிர்க்கும் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். மேலும் படத்தில் கிஷோர்,பசுபதி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தைஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.

‘கருப்பன்’ படத்தின் மோஷன் போஸ்டர், நேற்றிரவு 12 மணிக்குவெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், கூறியபடி நேற்று வெளியாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியிடப்படவில்லை என படக்குழு தெரிவித்தது. நேற்று வெளியாக இருந்த ‘கருப்பன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகததால் இது விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்