ஆப்நகரம்

பாலிவுட்டிற்கு செல்கிறாரா வேதா?

இந்தியில் ரீமேக்காகவுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 4 Apr 2018, 5:09 pm
இந்தியில் ரீமேக்காகவுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil vikram-vedha


நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளார். தமிழில் அதிகப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவர் சிஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அதேபோல் பாலிவுட்டிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இருவரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் அவரையே நடிக்க வைக்கலாம் என்று படக்குழு எணணியுள்ளது. புதிதாக ஒரு நடிகரைத் தேடிப்பிடித்து அந்த கேரக்டருக்குள் புகுத்துவதைவிட, கேரக்டராகவே வாழ்ந்த விஜய் சேதுபதியையே அதில் நடிக்க வைத்துவிடலாம் என்று நினைக்கிறதாம் படக்குழு. ஆனால், விஜய் சேதுபதி அவர்களுக்கு பிடி கொடுக்காமல் கை நழுவி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்