ஆப்நகரம்

தனுஷ் இல்ல சூர்யாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி 'மகள்'

விஜய் சேதுபதியின் 'மகள்' சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

Samayam Tamil 15 Mar 2022, 10:08 am
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 'மகள்' சூர்யாவுடன் நடிக்கவிருக்கிறார்.
Samayam Tamil vijay sethupathis daughter to romance suriya
தனுஷ் இல்ல சூர்யாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி 'மகள்'


உப்பேனா

உப்பேனா தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனவர் க்ரித்தி ஷெட்டி. கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே தியேட்டர்களில் வெளியான உப்பேனா படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதன் மூலம் ராசியான நடிகை என்று பெயர் எடுத்தார் க்ரித்தி.

விஜய் சேதுபதி

உப்பேனா படத்தில் க்ரித்திக்கு அப்பாவாக நடித்தது விஜய் சேதுபதி. படத்தின் வில்லனும் அவர் தான். அதன் பிறகு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழ் படத்தில் நடிக்க க்ரித்தியை தேர்வு செய்தார்கள். மகளாக நடித்தவருடன் போய் எப்படி ஜோடியாக நடிப்பது என்று க்ரித்தியை வேண்டாம் என கூறிவிட்டார் விஜய் சேதுபதி.

தனுஷ்

விஜய் சேதுபதி அல்ல மாறாக தனுஷ் படம் மூலம் கோலிவுட் வருகிறார் க்ரித்தி ஷெட்டி என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி என்று விளக்கம் அளித்தார் க்ரித்தி. இந்நிலையில் அவர் தமிழ் திரையுலகிற்கு வருவது உறுதியாகிவிட்டது.

சூர்யா

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பது அனைவருக்கும் தெரியும். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது 18 வயதாகும் க்ரித்தி ஷெட்டி தான். விஜய் சேதுபதியின் ரீல் மகள் சூர்யாவுக்கு ஜோடியாகிவிட்டார். ஆனால் பாலா படத்தில் ஹீரோயினை கருப்பாக்கி காட்டுவாரே. க்ரித்தியை என்ன பாடுபடுத்த காத்திருக்கிறாரோ என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்