ஆப்நகரம்

கே.வி.ஆனந்த் - விஜய் சேதுபதி கூட்டணியின் 'கவண்'

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்கு 'கவண்' என தலைப்பிட்டுள்ளனர்.

TNN 20 Oct 2016, 11:44 am
சென்னை: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்கு 'கவண்' என தலைப்பிட்டுள்ளனர்.
Samayam Tamil vijay sethupathis film with kv anand titled kavan
கே.வி.ஆனந்த் - விஜய் சேதுபதி கூட்டணியின் 'கவண்'


விஜய் சேதுபதி, 'பிரேமம்' நாயகி மடோனா செபஸ்டின் இணைந்து நடிக்கும் இப்படம் ஐடி பணியின் பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தில் பிரபல நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்துக்காக நிறைய தலைப்புகளை தேர்வு செய்ததாகவும், இறுதியான 'கவண்' என்ற பெயரை ரசிகர்களே தேர்வு செய்ததாகவும் படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 'கவண்' என்றால் உண்டிக்கோல் என்று அர்த்தம். மனிதன் ஆயுதங்களை பயன்படுத்தக் கற்றுக்கொண்ட போது, அவன் தயாரித்த முதல் விசை கருவி, 'கவண்' என்று கருதப்படுகிறது. இலக்கை குறிவைத்து கை எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பறவைகளை வீழ்த்த அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்த பெயர் படத்தின் கதைக்கு கனகச்சிதமாக பொருந்தும் என கூறப்படுகிறது.

#Kavan - ...Aim The Target pic.twitter.com/yDha1heJfg — anand k v (@anavenkat) October 19, 2016 கல்பாத்தி ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 3ஆம் தேதியுடன் நிறைவடைவதாக இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார். எனினும், இப்படத்தின் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தின் சில புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்