ஆப்நகரம்

விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சீதக்காதி படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Nov 2018, 9:12 pm
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சீதக்காதி படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ravi


தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சீதக்காதி என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் வரும் 16ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்துடன் இணைந்து ஜெயம் ரவியின் அடங்க மறு படமும் வெளியாக இருந்த நிலையில், தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

உத்தரவு மகாராஜா படத்தில் நடித்துள்ள நடிகர் உதயா தயாரிப்பாளர் சங்கத்தில், தயாரிப்பாளர்கள் சீதக்காதி மற்றும் அடங்க மறு ஆகிய படங்களின் வெளியீடை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதையடுத்து, தயாரிப்பாளர்கள் மற்றும் இப்படங்களின் விநியோகஸ்தர்கள் சீதக்காதி மற்றும் அடங்க மறு ஆகிய படங்களின் வெளீட்டு தேதி தள்ளி வைக்க ஒப்புக்கொண்டனர். இதற்கு நடிகர் உதயா நன்று தெரிவித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: படங்களில் வெளியீட்டு தேதி தள்ளி வைக்க ஒப்புக்கொண்டதற்கு சீதக்காதி மற்றும் அடங்க மறு ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி. நான் தற்போது உத்தரவு மகாராஜா என்ற படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் செய்துள்ளேன்.

இப்படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளது. இது மிகவும் குறைவான பட்ஜெட் படம். இப்படத்துடன் இணைந்து ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படமும் வெளியாகவுள்ளது. இதுவும் குறைவான பட்ஜெட் படம். இதையடுத்து, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எனது தனிப்பட்ட கருத்தை நான் முன் வைத்தேன். அதற்கு தகுந்த பலன் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக உத்தரவு மகாராஜா படம் வரும் 16ம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்