ஆப்நகரம்

விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்த நடிகர் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘சீதக்காதி’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டிவியான விஜய் கைப்பற்றியுள்ளது.

Samayam Tamil 14 Dec 2018, 6:09 pm
தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் அதிக படங்களில் நடித்து வரும் பெருமைககுரியவர் நடிகர் விஜய் சேதுபதிதான். இவருடைய ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதை கோணத்தில் இருக்கும். அவரும் அப்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ‘மக்கள் செல்வன்’ என்ற படத்தை பெற்றுள்ளார் விஜய்சேதுபதி.
Samayam Tamil seethakathi


அவரின் நடிப்பில் அனைவரையும் அண்மையில் அசரவைத்தது சீதக்காதி படத்தின் லுக் தான். இதில் அவர் 90 வயது முதியவர் அய்யா ஆதிமூலமாக நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அர்ச்சனா நடித்துள்ளார். இந்தப் படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் விஜய் சேதுபதியின் 25வது படமாகும்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. தற்போது ‘சீதக்காதி’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை, ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளதாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்