ஆப்நகரம்

நாளை வெளியாகும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர்!

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் குடியரசு தினமான நாளை வெளியாகவுள்ளது.

Samayam Tamil 25 Jan 2019, 3:36 pm
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வருகிறார். இந்த படம் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil super-delux


இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். மேலும் படத்தில் அவருடன், சமந்தா, பகத் பாசில், மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்