ஆப்நகரம்

விஜய் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும்: பாஜக தமிழிசை!!

''விஜய் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும்'' என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 5 Nov 2018, 3:12 pm

Sarkar First Review: சர்கார் விமர்சனம்!! மினி விமர்சனம்

'கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு குறித்து படம் எடுக்கின்றனர்'' என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பாஜக தமிழிசை
பாஜக தமிழிசை


மெர்சல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பாஜகவினர் அந்தப் படத்திற்கு பகிரங்க விளம்பரம் அளித்து இருந்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மெர்சல் படத்தையும், அதில் நடித்திருந்த விஜய்யையும் படம் திரைக்கு வருவதற்கு முன்பே கடுமையாக விமர்சித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி மீடியாக்களில் பெரிய அளவில் எதிரொலித்து தேசிய அளவில் இந்தப் படத்திற்கு விளம்பரத்தை தேடி தந்தது.

பாஜக கட்சியால் வெறுமனே படத்தை விமர்சிக்கத்தான் முடிந்ததே தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அந்தளவிற்கு அந்தப் படம் வெற்றி பெற்று சாதனை படைத்தது. தெலுங்கில் மட்டும் சில வசனங்களை நீக்கினர்.
இந்த நிலையில் தற்போது விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் சர்கார் படத்திலும் அரசியல் வசனங்கள் பறக்க உள்ளது. இந்தப் படம் குறித்து ஏற்கனவே தனது கருத்தை தெரிவித்து இருந்த தமிழிசை, நாங்கள் பேசி சர்கார் படத்திற்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை என்றார்.

இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில், ''பல பேர் முதல்வர் கனவோடு சினிமாவில் நடிக்கின்றனர். அவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும். கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு குறித்து படம் எடுக்கின்றனர். விஜய் முதலில் சினிமாவில் நேர்மையாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்