ஆப்நகரம்

Vijay மாஸ்டர் மூன்றாவது லுக்: சத்தியமா முடியலங்கண்ணா

மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக்கை பார்த்த ரசிகர்கள் சத்தியமாக இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 27 Jan 2020, 9:05 am
மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக்கை பார்த்த ரசிகர்கள் சத்தியமாக இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil vijay starrer master third look out fans cant stop praising
Vijay மாஸ்டர் மூன்றாவது லுக்: சத்தியமா முடியலங்கண்ணா


மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு போஸ்டர்களில் விஜய் மட்டுமே இருந்தார். இந்நிலையில் மூன்றாவது போஸ்டரில் விஜய்யும், விஜய் சேதுபதியும் பயங்கரமாக மோதிக் கொள்வது போன்று போஸ் கொடுத்துள்ளார்கள்.

Twitter-Anirudh Ravichander

விஜய், விஜய் சேதுபதி

விஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதி என்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் போஸ்டரை பார்க்கும் போது அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. போஸ்டரை பார்த்த ரசிகர்களும் சரி, திரையுலக பிரபலங்களும் சரி படத்தை பார்க்க ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டுமா, இப்பவே முடியலயே என்று தெரிவித்துள்ளனர். இரண்டாவது போஸ்டர் காப்பியடிக்கப்பட்டது என்று புகார் எழுந்த நிலையில் புதிய போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ்

விஜய்யும், விஜய் சேதுபதியும் கொடுத்துள்ள போஸை பார்த்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். விக்ரம் வேதா அளவுக்கு செமயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தன் ஸ்டைலில் படம் எடுத்தால் நிச்சயம் எதிர்பார்ப்பு நிறைவேறும். அப்படி இல்லாமல் விஜய்க்காக மாஸாக்குகிறேன் என்று கதையில் திருத்தம் செய்தால் அது சொதப்பிக் கொள்ளும்.

அப்டேட்

மாஸ்டர் படம் குறித்து எதுவும் சொல்லாமல் லோகேஷ் கனகராஜ் அமைதியாக வேலை பார்ப்பது விஜய் ரசிகர்களுக்கு லைட்டாக கடுப்பாக இருந்தாலும் படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்று நம்புகிறார்கள். கைதி படத்தை எடுத்து விஜய்யின் பிகிலோடு வெளியிட்டு வெற்றி கண்டவர் லோகேஷ் என்பதால் அவர் அப்டேட் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை படம் கெத்தாக இருந்தால் போதும் என்கிற மனநிலையில் உள்ளனர் ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்