ஆப்நகரம்

Master படமே முடியல! அதுக்குள்ள விஜய் ஆரம்பிச்சிட்டாராமே ?

படமே முடியவில்லை அதுக்கு முன்னாடியே விஜய் ஆரம்பிச்சிட்டாராம் என பேசிக்கொள்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

Samayam Tamil 26 Feb 2020, 4:38 pm
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஷூட்டிங் முடிய இன்னும் பத்து நாட்கள் வரை ஆகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
Samayam Tamil vijay


மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இப்பொழுதுதான் துவங்கிய மாதிரி இருக்கிறது. ஆனால், படப்பிடிப்பை படு வேகத்தில் நடத்தி முடித்து, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு பக்கம் போஸ்ட் புரொடொக்ஷன் வேலைகளைத் துவங்க தயாராகியுள்ளது படக்குழு எனும் செய்தி வருகிறது. இன்னொரு பக்கம் விஜய் தான் நடித்துள்ள காட்சிகளுக்கு டப்பிங் பேசத் துவங்கிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.


இன்று காலை, டப்பிங் வேலைகளை தொடங்கியதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் ஒரே கட்டமாக முடித்துவிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. விஜய்க்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் பிற நடிகர்களின் டப்பிங்கும் தொடங்குமாம். ஏற்கனவே சில பாகங்களின் எடிட்டிங் முடிந்துவிட்டது என கூறப்பட்டது. இவ்வளவு வேகமாக அனைத்து பணிகளையும் முடித்தாலும், படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாத இறுதிக்கு சென்றுவிடும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 9ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தணு, ரம்யா, அர்ஜூன் தாஸ், தீனா, நாகேந்திரபிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.


படத்தின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும், இன்னும் பத்து நாட்களுக்கு படப்பிடிப்பு நடக்கும் எனவும் கூறிவந்த நிலையில், இப்பவே டப்பிங்கை தொடங்கிட்டாரே என்று வியக்கின்றனர் ரசிகர்கள். இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை லோகேஷ் கனகராஜ்தான். கொடுத்த பட்ஜெட்டை விட குறைவாக முடித்து, மீதி பணத்தை தயாரிப்பாளர் கையில் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்