ஆப்நகரம்

Thalapathy 63 Latest Update: ’தளபதி 63’ படப்பிடிப்பில் சுவாரசியம் - இளம் நடிகையை ஆச்சரியப்படுத்திய விஜய்!

தன்னுடன் நடிக்கும் இளம் நடிகையை நடிகர் விஜய் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Samayam Tamil 17 May 2019, 12:38 pm
அட்லி கூட்டணியில் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். முன்னதாக வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. எனவே முந்தைய படங்களின் சாதனையை முறியடிக்கும், படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Samayam Tamil Vijay Amrita


இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெராப், கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு, எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அணிக்கு பயிற்சியாளராக விஜய் நடித்து கொண்டிருக்கிறார். அந்த அணி கேப்டனாக மேயாத மான் இந்துஜா நடிக்கிறார்.

இவரது அணியில் வர்ஷா பொல்லம்மா, ரெபோ மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் புதிதாக நடிகை அம்ரிதா ஐயர் ‘தளபதி 63’ படத்தில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அம்ரிதா ஐயருக்கு கடந்த செவ்வாய் அன்று பிறந்த நாள் வந்துள்ளது. இதனை அறிந்த விஜய் உடனே கேக் வாங்கி வரச் சொல்லி, அம்ரிதாவிற்கு ஆச்சரியம் அளித்துள்ளார். அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்ததும், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்