ஆப்நகரம்

ரசிகர்களுக்கு நன்றி கூறிய விஜய்!

நடிகர் விஜய், தன் ரசிகர்களுக்கு தன்னுடைய அன்பு கலந்த நன்றியை கூறியுள்ளார்.

TOI Contributor 16 Apr 2016, 12:11 pm
நடிகர் விஜய், தன் ரசிகர்களுக்கு தன்னுடைய அன்பு கலந்த நன்றியை கூறியுள்ளார்.
Samayam Tamil vijay thanked his fans
ரசிகர்களுக்கு நன்றி கூறிய விஜய்!

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘தெறி’. இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்புக்கு விஜய் நன்றி கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். மேலும் மகேந்திரன், பிரபு, மொட்டை ராஜேந்திரன், ராதிகா, நைனிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. போலீஸ் கதையை கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வணீக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்று வருகிறது.
ரசிகர்களின் வரவேற்பால் ‘தெறி’ படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் கொடுத்த பெரிய வரவேற்புக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்