ஆப்நகரம்

Ravinder Mahalakshmi: திருமணம் முடிஞ்ச கொஞ்ச நாள்ள இதெல்லாம் தேவையா.?: ஷாக்கான ரசிகர்கள்.!

அண்மையில் திருமணம் முடித்த மகாலட்சுமி, ரவீந்தர் தம்பதியினருக்காக பிரபல தொலைக்காட்சியில் ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Sep 2022, 7:34 am
சமீபத்தில் மிக அதிகமாக பேசப்பட்டது ரவீந்தர் – மகாலட்சுமி திருமணம் குறித்து தான். திரையுலக பிரபலங்களை விட இவர்களின் திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. பல யூடிப் சேனல்களும் இன்றுவரை இவர்களை பேட்டி கண்டு வருகிறது.
Samayam Tamil மகாலட்சுமி ரவீந்தர்
மகாலட்சுமி ரவீந்தர்


தொகுப்பாளினியாக தனது சினிமா பயணத்தை சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொடங்கி பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் மகாலட்சுமி. தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர்களின் திருமணம் குறித்து பேச்சுக்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக உள்ளது. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கிறார். தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டுள்ளார் மகாலட்சுமி.

அண்மையில் இந்த தம்பதினர் கடந்த சில தினனக்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர் இந்த தம்பதியினர். அப்போது, சமீபத்தில் நடைபெற்ற உச்ச நட்சத்திரங்களின் திருமணத்தை ஓடிடியில் விற்றால் கூட பார்க்க முடியாத அளவு பணத்தை எங்கள் திருமணத்தின் மூலம் இணையம் உருவக்கேலியை வைத்து சம்பாதித்தது ரொம்ப வித்தியாசமாக இருந்தது" என தெரிவித்திருந்தார்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் விமர்சனம்: இசைப்புயல் என்ன சொல்லிருக்காரு தெரியுமா.?

இந்நிலையில் தற்போது இருவருக்கு பிரபல தொலைக்காட்சியில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் வந்தாள் மகாலட்சுமி என்ற பெயரில் ஷோ நடந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கான வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ‘திருமண முடிந்ததும் இதெல்லாம் தேவைதானா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்