ஆப்நகரம்

Sarkar Poster: அடுத்த முதல்வர் விஜய்! சென்னையில் பிரம்மாண்ட போஸ்டர்!

பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Samayam Tamil 5 Nov 2018, 6:55 pm
தமிழகத்தின் அடுத்த முதல்வர் நடிகர் விஜய் எனக் குறிப்பிடும் வகையில் சர்கார் படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Samayam Tamil 1541386222-3369


தளபதி விஜய் என்று அழைக்கப்படும் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதை திருடப்பட்டது என சர்ச்சை எழுந்தது. இதனைக் கடந்து தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தை விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

படத்தை வரவேற்கும் முகமாக பேனர்களும் போஸ்டர்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்துள்ளன. சென்னையில் ரசிகர்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக விஜய் வருவார் எனக் குறிப்பிடுவது போல போஸ்டர் வைத்துள்ளனர்.

பிரம்மாண்டமான இந்த போஸ்டரில் இதுவரை தமிழக முதல்வராக இருந்தவர்களின் படங்கள் உள்ளன. அத்துடன் “எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்” என்ற வாசகமும் உள்ளது. ஒரு விரலை உயர்த்திக் காட்டும் படமும் பெரிய அளவில் விஜய் படமும் உள்ளன.

பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்