ஆப்நகரம்

நான்கு இயக்குநர்களில், நடிகர் விஜய் அடுத்த சான்ஸ் யாருக்கு கொடுப்பார்!

கதை கூறிய நான்கு முன்னணி இயக்குநர்களில் அடுத்த சான்ஸ் நடிகர் விஜய் யாருக்கு கொடுப்பார் என்பது மிக சஸ்பென்சாக உள்ளது

Samayam Tamil 5 May 2018, 6:46 pm
கதை கூறிய நான்கு முன்னணி இயக்குநர்களில் அடுத்த சான்ஸ் நடிகர் விஜய் யாருக்கு கொடுப்பார் என்பது மிக சஸ்பென்சாக உள்ளது
Samayam Tamil dc-Cover-i9s0l5vs9ifmfon23qe6q2om73-20160412011327.Medi.


நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இந்தப்படத்தில்வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உட்பட பலர் நடித்து வருகின்றனர். படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை, சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஆகையால் படத்தை வேகமாக எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை, அதாவது 63வது படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இயக்குனர்கள் மோகன் ராஜா, ஏ.எல்.விஜய், வெற்றிமாறன், அமீர் எனபலரும் விஜய்யிடம் கதை சொல்லிவிட்டு காத்திருக்கிறார்கள். இவர்களில் யார் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்