ஆப்நகரம்

ஏமாத்துவதற்காக வெளியான போஸ்டர் தான் மூன்றுமுகம்! படக்குழு விளக்கம்

தெறி படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார்.

TNN 2 Apr 2017, 5:21 pm
தெறி படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார்.
Samayam Tamil vijay61 team explains movie title rumour
ஏமாத்துவதற்காக வெளியான போஸ்டர் தான் மூன்றுமுகம்! படக்குழு விளக்கம்


இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். சென்னையில் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்து பிரான்ஸ் செல்ல இருந்த நிலையில், தற்போது அட்லி புதிய திட்டத்துடன் ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனை முடித்த பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்ல படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

தற்போது மிகவும் முக்கியமான அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் படத்தின் டைட்டில் ரகசியமாக வெளியாகியுள்ளது. அதில் மூன்று வேடங்களில் இளையதளபதி விஜய் நடிக்கும் மூன்றுமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தற்போது படக்குழு விளக்கம் அளித்துள்ளது. படத்திற்கு இன்னும் டைட்டிலே வைக்காத நிலையில், நேற்று வெளியான போஸ்டர் உண்மையான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இல்லை. இது முட்டாள் தினத்திற்காக ரசிகர் ஒருவர் உருவாக்கிய போஸ்டர் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்