ஆப்நகரம்

Taxiwala Movie Download: தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம் : படம் ரிலீஸுக்கு முன்னரே வெளியானதால் அதிர்ச்சி

தமிழ் திரை உலகத்திற்கு மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகத்திற்கும் பெரிய பிரச்னையாக தமிழ் ராக்கர்ஸ் உருவெடுத்துள்ளது. தமிழ் ராக்கர்ஸில் தெலுங்கு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அப்படம் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 2:31 pm
ஐதராபாத் : விஜய் தேவராங்கொண்டாவின் புதிய படம் டேக்ஸிவாலா படம் ரிலீஸுக்கு முன்னரே ஹெ.டி பதிப்பை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil tamil-rockers


படம் வெளியாகி சில மணி நேரத்தில் படத்தை திருட்டுத் தனமாக இணைய தளத்தில் வெளியிட்டு, சினிமா துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றது தமிழ் ராக்கர்ஸ்.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இயக்கிவருவது யார் என தெரியாமல் திரைத் துறையினர் புலம்பி வருகின்றனர். முன்னனி நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு முன்னரே, உங்கள் படம் ரிலீஸ் ஆகும் தேதியில் HD பிரிண்ட் ரிலீஸ் செய்வோம் என சவால் விடுப்பதும். தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட திருட்டு தனமாக படங்களை வெளியிடும் இணையதளத்தை முடக்க நீதிமன்றத்தில் முறையிடுவது வழக்கமாக உள்ளது.


படம் ரிலீஸுக்கு முன் இணையதளத்தில் ரிலீஸ் :
இந்நிலையில் தமிழில் ‘நோட்டா’ என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் விஜய் தேவராங்கொண்டாவின் 'டேக்ஸிவாலா’ என்ற படம் நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணி நடக்கிறது.


இந்நிலையில் படம் வெளியாவதற்க்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ‘டேக்ஸிவாலா’ படத்தை HD பிரிண்ட் ரிலீஸ் வெளியிட்டிருப்பதால் தமிழ் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு சினிமாவும் பதற்றத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்