ஆப்நகரம்

கேப்டன்னாலே கெத்து தான்! - பிக்பாஸ் குறித்து கலக்கல் பதில்

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேட்டதற்கு விஜயகாந்த் கலக்கனான பதிலை தெரிவித்துள்ளார்.

TNN 8 Oct 2017, 2:35 pm
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேட்டதற்கு விஜயகாந்த் கலக்கனான பதிலை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vijayakanth talk about bigg boss tamil
கேப்டன்னாலே கெத்து தான்! - பிக்பாஸ் குறித்து கலக்கல் பதில்


விஜயகாந்த் என்றாலே அவரின் நகைச்சுவை பேச்சு அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் ஒரு வார இதழுக்கு கேப்டன் சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

அதில், விஜய்காந்திடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறீர்களா? என கேட்டதற்கு, உடனே, கேப்டன், “பிக் பாஸுன்னா என்னா?” என கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அடுத்த சில நொடுகளில், “ஓ அந்த கமல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழகுறாரே அதுவா?, அதெல்லாம் எங்கங்க பார்க்க நேரமிருக்கு. எப்பவாச்சும் என் மகனோடு ஹாலிவுட் படத்தை தான் பார்ப்பேன்.” என கூறி காமெடி செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்