ஆப்நகரம்

விஜய்யின் மடியில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? இந்த பிரபல நடிகர் தான்

விஜய்யின் குழந்தைப் பருவ போட்டோக்கள் சில தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Samayam Tamil 16 Sep 2020, 4:02 pm
தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவரை பற்றி ஒரு சின்ன அப்டேட் வந்தால் கூட அதை மிகப் பெரிய அளவில் கொண்டாடுவார்கள். புதிதாக அப்டேட் வரவில்லை என்றாலும் அவரது பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை ஏதாவது வெளியானதை பெரிய அளவில் வைரலாக்கி விடுவார்கள். அந்த வகையில் தற்போது விஜய் சிறு வயதில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Vijay Childhood Pic


விஜய் தன்னுடைய சிறு வயது புகைப்படங்களில் பெரும்பாலும் தனது அம்மா உடன் தான் இருக்கிறார். தற்போது வைரலாகி வரும் போட்டோவில் விஜய் அவரது அம்மாவுடன் ஒரு திருமணத்தில் பங்கேற்று இருக்கிறார். அங்கு அவர் சாப்பிடும் போது மடியில் தம்பி விக்ராந்தை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது. அந்த போட்டோவை பார்த்து விக்ராந்த் தானா இது என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.



மேலும் விஜய் பள்ளியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி இருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை அதிகளவு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அவர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காகத்தான். அது பற்றி தினம்தோறும் படக்குழுவினரிடம் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது வரை மாஸ்டர் ரிலீஸ் பற்றி படக்குழுவினர் வாய்திறக்கவில்லை. இந்த வருட தீபாவளி அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகலாம் என சில மாதங்களுக்கு முன்பே தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்திருந்தார்.

ஆனால் அடுத்த வருட பொங்கலுக்கு தான் மாஸ்டர் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது என சமீபத்திய தகவல் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது. அந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து இருக்கிறார். அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது தமிழ் படம். இதற்கு முன்பாக ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார். மேலும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி கைதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தான் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருப்பதாக விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பதால் அவரது கதாபாத்திரம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க விஜய் தனது 65வது படத்திற்காக தற்போது தயாராகி வருகிறார். அதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த விநாயகர் சதுர்த்தி நன்றே தளபதி 65 படத்தின் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் கதையில் சில மாற்றங்களை செய்ய கூறியதாகவும், அது முடிந்த பிறகு அறிவிப்பு வெளியிடலாம் என விஜய் கூறிவிட்டார் என தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர். முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என பரவிய தகவல் உண்மை இல்லை என அவர் தெரிவித்து இருந்தார். அதனால் இது புது கதையாக தான் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்