ஆப்நகரம்

ஏ.ஆர்.ரஹ்மானின் மெலோடியில் நீதானே பாடல் வெளியீடு: மெர்சலில் தளபதி ரசிகர்கள்!

மெர்சல் படத்தின் இரண்டாவது பாடலான நீதானே பாடல் வெளியாகியுள்ளது.

TNN 17 Aug 2017, 6:39 pm
மெர்சல் படத்தின் இரண்டாவது பாடலான நீதானே பாடல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil vijays mersal movie neethanae song released today
ஏ.ஆர்.ரஹ்மானின் மெலோடியில் நீதானே பாடல் வெளியீடு: மெர்சலில் தளபதி ரசிகர்கள்!


விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே கடும் எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மெர்சல் படத்தின் போஸ்டர் முதல் டீசர் வரை சமூக வலைதளங்களில் பல கோடி மக்களால் பார்த்து பகிரப்பட்டு வருகிறது.
#Neethanae in the magical voices of @arrahman & @shreyaghoshal is out now#Gaana- https://t.co/niXKbjo4vx#Hungama- https://t.co/spPPFD9Jsr pic.twitter.com/wcq8xkCAaL — Sony Music South (@SonyMusicSouth) August 17, 2017 அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏ.அர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் மெர்சல் படத்தின் நீதானே என்ற பாடல் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இன்று இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விஜய்யின் இந்தப் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட 10 வருடங்கள் காத்திருந்தாராம். இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்ரேயா ஹோஷல் இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


the 2nd song neethanae of vijay mersal released

அடுத்த செய்தி

டிரெண்டிங்