ஆப்நகரம்

SIIMA Awards 2018: சைமாவில் 5 விருதுகள் அள்ளிய தளபதியின் மெர்சல்!

சைமா விருது வழங்கும் விழாவில் விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படம் 5 விருதுகள் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 16 Sep 2018, 5:09 pm
சைமா விருது வழங்கும் விழாவில் விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படம் 5 விருதுகள் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil mersal


ஆண்டுதோறும் சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் என்று பலருக்கும் சைமா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 7வது சைமா விருது வழங்கும் விழா கடந்த 14ம் தேதி மற்றும் 15ம் தேது துபாயில் நடந்தது. இதில், தமிழ், தெலுங்கு, மலையாம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்து விளங்கிய நடிகர், நடிகைகள் உள்பட பலருக்கு சைமா விருது வழங்கப்பட்டது. இதில், விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படத்திற்கு 5 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிறந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய திரையுலகமே திரண்டு வந்த ‘சைமா அவார்ட்ஸ் 2018’ – பிரத்யேக படங்கள்

மெர்சல் வாங்கிய 5 விருதுகள்:

சிறந்த இயக்குனர் : அட்லீ

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த பாடலாசிரியர் : விவேக் (ஆளப்போறான் தமிழன்)

சிறந்த வில்லன் நடிகர் : எஸ்.ஜே.சூர்யா

சிறந்த பின்னணிப்பாடகர் : சித் ஸ்ரீராம்

இந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படம் அரசியல் பின்னணியை மையமாக வைத்து உருவாகியுள்ளதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மெர்சலைப் போன்று அடுத்த ஆண்டிற்கு இப்படத்திற்கு பல விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SIIMA விருதுகள் 2018 - சிறந்த நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா!

அடுத்த செய்தி

டிரெண்டிங்