ஆப்நகரம்

ஐரோப்பாவிற்கு பறக்கும் விஜய்!

ஐரோப்பாவிற்கு பறக்கும் விஜய்!

TNN 25 Apr 2017, 9:13 am
தெறி வெற்றியை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லி இணையும் அடுத்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மற்றும் சென்னையில் நடைபெற்று வந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் படக்குழுவினர் கஷ்டப்பட்டு படப்பிடிப்பு நடத்திவந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க உள்ளனர். நாளை ஐரோப்பாவிற்கு செல்லும் படக்குழு ஒரு மாதம் அங்கு தங்கி ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Samayam Tamil vijays off to europe
ஐரோப்பாவிற்கு பறக்கும் விஜய்!


ராஜஸ்தான் ஷெட்யூலுக்கு விஜய்யின் ஸ்டைலிஸ்டாக நீரஜா கோனா பணியாற்றினார். தற்போது ஐரோப்பாவில் நடைபெறும் ஷூட்டிங்கிற்கு தெறி படத்தில் ஸ்டைலிஸ்டாக பணிபுரிந்த கோமல் சஹானி பணியாற்றுகிறார். இவர் மும்பையை சேர்ந்த புகழ்பெற்ற ஸ்டைலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் – அட்லி கூட்டணி தெறி படம் மூலம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதால், இவர்களின் அடுத்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்