ஆப்நகரம்

oru kutti kathai உள்ளூர்ல கிண்டலுக்கு ஆளானாலும் வெளிநாட்டுல ரசிக்குறாங்களே!

குட்டி கதை பாடல் வெளிநாடுகளிலும் வைரலாவதாக கூறி ட்வீட்டியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

Samayam Tamil 18 Feb 2020, 10:51 am
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி, வெளியிடப்பட்டது. அந்த பாடல் தற்போது வரை 15 மில்லியன் பார்வைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த பாடலை வெளிநாட்டுக் காரர்களும் ரசித்து மகிழ்கிறார்கள் என அனிருத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதற்கு சான்றாக ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார் அனிருத்.
Samayam Tamil oru kutti kathai


அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ


விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ள இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அனிமேஷன் விஜய் இந்த பாடலில், நிறைய கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார். அதிலும் அவரது மேடைப் பேச்சுக்களை தொகுத்து ஆங்கிலத்தில் பாடலாக கொடுத்தது போன்ற ஒரு உணர்வு வருகிறது என்கிறார்கள் ரசிகர்கள். எனினும் இது ஒரு உற்சாகப்படுத்தத்தக்க பாடலாக இருக்கிறது என்கிறார்கள்.

பாடல் முழுக்க ஆங்கிலத்தில் இருந்தால் எல்லா நாட்டுக் காரர்களும் கேட்பாங்கதான் என சிலர் கிண்டலடித்துள்ளனர். இருந்தாலும், பாடலில் சொல்லப்பட்ட விசயம் அவர்களுக்கு எளிதாக புரியும் என்பதே அவர்கள் பாடலை ரசிக்க காரணம் என விஜய் ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.


இந்த பாடல் மட்டுமல்ல, அஜித் நடிப்பில் ஆலுமா டோலுமா பாடலும் உலகின் பல நாடுகளிலும் பிரபலமானதாக இருந்தது. வெளிநாட்டுக் காரர்கள் இந்த பாடலுக்கு நடனமாடுவது போன்ற பல வீடியோக்களும் சமூக வலைதலங்களில் பகிரப்பட்டது. அந்த பாடலின் இசையமைப்பாளரும் அனிருத் தான்.


சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா காட் டேலன்ட்ஸ் ஷோவில் பேட்ட படத்தில் வந்த மரணம் மாஸு மரணம் பாடலுக்கு, நடனமாடி அசத்தியது இந்திய குழு. அதுவும் அனிருத்தின் பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்