ஆப்நகரம்

“வில்லாதி வில்லன்” தான் சர்க்கார் படத்தின் முந்தைய தலைப்பா?

விஜய்யின் சர்கார் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் இதுதான் என இயக்குனர் ஏஆர். முருகதாஸே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Oct 2018, 3:09 pm
இயக்குனர் ஏஆர் முருகதாஸ், விஜய் கூட்டணி துப்பாக்கி, கத்தியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இரண்டு மிகப்பெரிய மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இவர்களின் 3வது வெற்றியைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வத்தில் இருக்கின்றனர்.
Samayam Tamil sarkar


தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் அதிக ஆதரவை பெற்றுவரும் நிலையில் விஜயின் சர்கார்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்துவிட்டது. நாளை படத்தின் டீஸரும் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் சர்கார் படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் சர்கார் படத்திற்கு முதலில் வில்லாதி வில்லன் என்று பெயர் தான் வைத்திருந்தேன் என்றார்.

சர்கார் பெயரை விட இந்த பெயர் வைத்திருந்தால்.. இன்னும் மாஸ்ஆக இருந்திருக்கும் என திரையுலகில் பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்