ஆப்நகரம்

விஜய் மேடையில் கூறிய ஒரு வார்த்தைக்கு கிளம்பிய எதிர்ப்பு

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய ஒரு வார்த்தைக்கு எதிர்ப்பு வந்துள்ளது.

Samayam Tamil 18 Mar 2020, 2:16 pm
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை சென்னையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. அதில் விஜய், லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், அனிருத், சாந்தனு உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Samayam Tamil Vijay, Vijay Sethupathi and Lokesh Kanagaraj at Master Audio Launch function


விழா மேடையில் பேசும்போது பலரும் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றி மறைமுகமாக பேசினர். அதன்பிறகு மேடையில் பேசிய விஜய்யும் படக்குழுவினர் ஒவ்வொருவர் பற்றியும் விரிவாக பேசினார்.

அதன் பிறகு தன் பேச்சை முடிக்கும்போது "உண்மையா இருக்கனும்னா சில நேரத்துல ஊமையா இருக்க வேண்டியதா இருக்கு. நான் வரேங்க" என கூறி தன் பேச்சை முடித்தார் விஜய்.

விஜய் 'ஊமை' என்ற வார்த்தையை கூறி மாற்றி திறனாளிகளை இழிவாக பேசியுள்ளார் என சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் - 3 இயக்கத்தின் தலைவர் தீபக் என்பவர் விஜய் பேசியத்திறகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தீபக் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

ஒரு குறிப்பிட்ட உடல் குறையை கொச்சையாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது, சட்டப்படி அது தவறு என கூறியுள்ளார் அவர்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது கொரோனாவால் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மாஸ்டர் ரிலீஸ் இன்னும் தள்ளிவைக்கப்படவில்லை, திட்டமிட்டபடி ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என இன்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்