ஆப்நகரம்

Atlee: ஹாலிவுட்டை நோக்கி சென்ற விஜய்யின் 'தளபதி 63'

தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்திற்கான ஆரம்பகட்ட பணிக்காக இயக்குனர் அட்லி மற்றூம் படக்குழுவினர் ஹாலிவுட்டுக்கு சென்றுள்ளனர்.

Samayam Tamil 6 Dec 2018, 12:33 pm
நடிகா் விஜய் சா்காா் படத்தைத் தொடா்ந்து இயக்குநா் அட்லியுடன் 3வது முறையாக மீண்டும் கைக்கோா்த்துள்ளாா். தெறி, மொ்சல் படங்களைத் தொடா்ந்து இந்த கூட்டணியின் அடுத்தப்படத்திற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. மேலும் இந்த படம் அடுத்த தீபாவளியன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil vijay


ஹாலிவுட்டில் தளபதி 63:
இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. அதற்கான வேலையை இப்போதே தொடங்கியுள்ளார் இயக்குனர் அட்லி.


இப்படத்திற்கான லொகேஷன் பார்ப்பதற்காக அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின், லாஸ் ஏஞ்சல் அருகில் உள்ள ஹாலிவுட் நகருக்கு இயக்குனர் அட்லி மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா சென்றுள்ளனர்.


அந்த புகைப்படங்களை அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்