ஆப்நகரம்

Bigil: தளபதி 64 படத்துல இத்தன பேரு நடிக்கிறாங்களா?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து முழு விவரம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Nov 2019, 11:07 am
விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த படம் பிகில். விஜய் என்பதால், பிகில் படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்தது. அதோடு, வசூலும் ரூ.260 கோடிக்கும் அதிகம் என்கிறது தகவல். ஆனால், படம் வெளியான போது கிடைத்த திரையரங்கை விட தற்போது இப்படத்திற்கு திரையரங்குகள் குறைந்துள்ளது. மாறாக கார்த்தியின் கைதி படத்திற்கு கிடைத்த திரையரங்கை விட கூடுதலாக திரையரங்குகள் கிடைத்துள்ளது.
Samayam Tamil தளபதி 64 படத்துல இத்தன பேரு நடிக்கிறாங்களா?
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்து முழு விவரம் வெளியாகியுள்ளது.


Bigil: விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பிறந்தநாள் கொண்டாடிய சிங்கப்பெண்ணே இந்துஜா!

பிகில் படம் வெற்றி கொடுத்ததைத் தொடர்ந்து விஜய் தனது 64 ஆவது படத்தில் பிஸியாகிவிட்டார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கௌரி ஜி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஹாட்ரிக் ஹிட்டுக்காக மீண்டும் இணைந்த சூர்யா – கவுதம் மேனன்!

இவர்களது வரிசையில், பிரிகிதா (ஆஹா கல்யாணம் புகழ்), ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், சேட்டன், அழகன் பெருமாள், மேத்யூ வர்கீஸ்,சுனில் ரெட்டி (வைபவின் சகோதரர் – சீதக்காதி புகழ்) ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பார்க்கும் பொழுது பேட்ட படம் தான் நினைவிற்கு வருகிறது.

மிக மிக அவசரம் பட கதாநாயகியை நேரில் அழைத்து பாராட்டிய கடம்பூர் ராஜு!

பேட்ட படத்தில் சசிகுமார், த்ரிஷா, மாளவிகா மோகன், சிம்ரன், சின்னி ஜெயந்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதே போன்றுதான் தற்போது தளபதி 64 படத்திலும் நட்சத்திரங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படம் கேங்ஸ்டர் படம் என்று கூறப்படுகிறது. தற்போது டெல்லியில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் மாளவிகா மோகனன், விஜய் ஆகியோருடன் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என்பதால், இப்படம் சர்ச்சையில் சிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, திருட்டு கதை விவகாரமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்