ஆப்நகரம்

Varisu: 'வாரிசு' படத்திற்காக படக்குழு போட்டுள்ள மெஹா திட்டம்: வேறலெவல் சம்பவம் கன்பார்ம்.!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்திற்காண புரமோஷன் பணிகள் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 8 Dec 2022, 6:36 pm
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'பீஸ்ட்' படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில்’ தளபதி 66' படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் முதன்முறையாக விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
Samayam Tamil வாரிசு
வாரிசு


தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப்படத்தை பொங்கல் வெளியீடாக கொண்டு வரும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் அப்டேட்யும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பி வருகின்றன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

Ashu Reddy: நடிகையின் காலை வருடி முத்தமிட்ட பிரபல இயக்குநர்: லீக்கான வீடியோவால் பரபரப்பு.!

இந்நிலையில் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடல் அண்மையில் வெளியானது. விவேக் எழுதிய இந்தப்பாடலை விஜய் பாடியிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக 'தீ தளபதி' பாடல் வெளியானது. சிம்பு பாடிய இந்தப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் யூடிப் டிரெண்டிங்கிலும் முதல் இடத்தை பெற்று வருகிறது.

Jigarthanda 2: வேகமெடுக்கும் கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா 2': வெளியான தாறுமாறு அப்டேட்.!

இந்நிலையில் 'வாரிசு' படத்திற்கான புரோமோஷன் வேலைகள் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினியின் 'கபாலி' பட பாணியில் படத்தை புரமோட் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பேருந்து, இரயில் மற்றும் விமானத்தில் 'வாரிசு' படத்தினை புரமோஷன் செய்யவுள்ளனர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Dhanush: கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் பட நாயகர்களை பின்னுக்கு தள்ளிய தனுஷ்: புதிய சாதனை.!

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'துணிவு' படமும் பொங்கலுன்று வெளியாகவுள்ளது. இந்தப்படத்திற்கான புரோமோஷன் பணிகளும் துவங்கவுள்ளன. நாலா இந்தப்படத்தின் முதல் சிங்கிளான 'சில்லா சில்லா' பாடல் வெளியாகவுள்ளது. எட்டு வருடங்களுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்