ஆப்நகரம்

Varisu: அப்பாடா.. நிம்மதி பெருமூச்சு விடும் தளபதி ரசிகர்கள்..!

விஜய்யின் 'வாரிசு' படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Samayam Tamil 22 Jun 2022, 5:29 pm
நெல்சனின் டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
Samayam Tamil Varisu
Varisu


பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தளபதி 66' படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து அண்மையில் தளபதி 66' படத்தின் படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெய சுதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே 'தளபதி 66' படத்தில் நடிக்கின்றனர். இந்தபடம் குடும்ப பாணியில் உருவாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இந்தப்படத்தின் ஷூட்டிங் துவங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு புகைப்படம் ஒன்று கசிந்து கொண்டே இருக்கிறது. சென்னை ஈசிஆர் குடியிருப்பு பகுதியில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் வெளியானது. ஸ்டைலான மாஸ் லுக்குடன் 'வாரிசு' என்ற தலைப்புடன் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது. ரசிகர்கள் இந்தப்படத்தின் போஸ்டரை கொண்டாடி வந்ததை தொடர்ந்து இன்று காலை இரண்டாவது லுக் வெளியானது.

பழைய கேப்டனா கர்ஜிக்கனும்: விஜயகாந்துக்கு ரஜினி வாழ்த்து.!

இந்த இரண்டு லுக்கும் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. படத்தின் போஸ்டரே குடும்பங்கள் கொண்டாடும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது 'வாரிசு' படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதுவரை வந்த லுக்கில் இந்த போஸ்டர் விஜய் ஸ்டைலில் செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். 'வாரிசு' படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்