ஆப்நகரம்

அதற்கு வாய்ப்பே இல்லை.. வதந்திக்கு கோப்ரா பட இயக்குனர் முற்றுப்புள்ளி

ரஷ்யாவில் நடத்தவேண்டிய படப்பிடிப்பை இங்கு சென்னையிலேயே நடத்தவுள்ளதாக பரவிய வதந்திக்கு கோப்ரா பட இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 May 2020, 11:40 pm
சீயான் விக்ரம் அடுத்து நடித்துவரும் படம் கோப்ரா. டீமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இந்த படத்தினை இயக்கி வருகிறார்.
Samayam Tamil Vikram


இந்த படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 20 விதமான கெட்டப்களில் நடிக்கிறார். கோப்ரா பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே சுமார் 7 வித்யாசமான கெட்டப்கள் காட்டப்பட்டிருந்தது. அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

கொரோனா தொற்று பரவ துவங்கும் முன்பு ரஷ்யாவில் படக்குழு ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்தது. ஆனால் இந்திய அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுக்க துவங்கியதால் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.

இந்நிலையில் ரஷ்யாவில் எடுக்கவேண்டிய காட்சிகளை இங்கேயே கிரீன் மேட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஷூட்டிங் செய்ய முடிவெடுத்திருப்பதாக செய்திகள் பரவியது.

அது பற்றி ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்டதற்கு பதில் கூறியுள்ளார் அஜய் ஞானமுத்து, 'அதற்கு வாய்ப்பே இல்லை' என கூறியுள்ளார். இதன் மூலமாக மிகப்பெரிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


அதனால் மொத்த படக்குழுவும் கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு மீண்டும் ரஷ்யா கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். மிர்னாலினி முக்கிய ரோலில் நடிக்கிறார். அது மட்டுமின்றி கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் இதில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவன் ஸ்கிறீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்