ஆப்நகரம்

Leo: 'விக்ரம்' பட நடிகரை களமிறக்கிய லோகேஷ்: எல்சியூவில் இணையும் 'லியோ'.?

விஜய்யின் 'லியோ' படம் குறித்து விக்ரம் பட நடிகர் ஜாபர் சாதிக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 14 Apr 2023, 7:06 pm
விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் 'லியோ' படம் உருவாகி வருகிறது. கோலிவுட் சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் படமாக லியோ உருவாகி வருகிறது. அண்மையில் காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தில் 'விக்ரம்' பட நடிகர் இணைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.
Samayam Tamil லியோ
லியோ


விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 'வாரிசு' படம் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு மொழியில் இந்தப்படம் வெளியானது. 'துணிவு' படத்துக்கு போட்டியாக வெளியான இந்தப்படம் வசூலிலும் மாஸ் காட்டியது. 'வாரிசு' படத்திற்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது குறித்த தகவல் வெளியானாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடாமல் இருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து 'வாரிசு' ரிலீசுக்கு பிறகு 'லியோ' படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 'லியோ' பட டைட்டில் அட்டகாசமான புரோமோ வீடியோவுடன் படப்பிடிப்பு துவங்கியது. விஜய்யும், லோகேஷ் கனகராஜும் ஏற்கனவே 'மாஸ்டர்' படத்தில் இணைந்து பணியாற்றியதை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது.

'மாஸ்டர்' படம் வசூலில் வரவேற்பை பெற்றாலும் விமர்சனரீதியாக ஒருசில சறுக்கலை சந்தித்தது. இதனால் 'லியோ' படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் உருவாக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அண்மையில் காஷ்மீர் ஷெட்யூலை முழுவதுமாக நிறைவு செய்தனர் படக்குழுவினர். இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பி வருகிறது.

Malavika Avinash: முகம் வீங்கிய நிலையில் மருத்துவமனையில் கே.ஜி.எஃப் நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி.!

இந்நிலையில் 'லியோ' படத்தில் விக்ரம் பட நடிகர் ஜாபர் சாதிக் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக லோகேஷுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சாதிக். அத்துடன் 'லியோ' என்ற ஹேஸ்டாக்கையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் 'விக்ரம்' பட நடிகர் லியோவில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே இந்தப்படத்தில் கமல், விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ஜாபர் சாதிக்கும் இணைந்துள்ளதால் 'லியோ' படம் எல்சியூ பாணியில் உருவாகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 'விக்ரம்' படத்தில் லோகேஷின் கைதி பட கதாபாத்திரங்கள் இடம்பெற்றதை போல் லியோவிலும் லோகேஷின் முந்தைய படங்களின் கேரக்டர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னப்பா சொல்றீங்க.. லோகேஷ், அனிருத் சேர்ந்து நடிக்க போறாங்களா.?: புது கதையா இருக்கே.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்