ஆப்நகரம்

இது என்ன புதுசா இருக்கு? தாத்தா கேரக்டரில் பேரன்!

விக்ரம் பிரபு தான் நடிக்கும் புதிய படத்தில் தன்னுடைய தாத்தா சிவாஜிகணேசன் கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 20 Mar 2018, 3:49 pm
விக்ரம் பிரபு தான் நடிக்கும் புதிய படத்தில் தன்னுடைய தாத்தா சிவாஜிகணேசன் கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil VikramPrabhu
தாத்தா கேரக்டரில் நடிக்கும் பேரன் விக்ரம் பிரபு

கருப்பு வெள்ளை திரையில் சினிமா படங்கள் வந்த போதே கொடி கட்டிப் பறந்தவர் ந டிகர் திலகம் சிவாஜி கணேசன். மேலும், தற்போதைய ஹீரோக்கள், ரஜினிகாந்த், விஜய் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார். இந்த நிலையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில், சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் வரும் மே மாதம் 9ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், மற்றொரு கதாபாத்திரத்தில் சமந்தா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகையர் திலகம் படத்தில் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு சிறப்பு தோற்றத்தில் நடிக்கயிருப்பதாகவும், நாகேஸ்வரராவ் கேரக்டரில் நாக சைதன்யாவும், என்.டி.ஆர். கேரக்டரில் ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்