ஆப்நகரம்

கார்ப்ரேட் பள்ளிகளை விட, கட்டாந்தரை பள்ளிக்கூடமே மேல்...! “பற பற பற”க்கும் அரசியல்!!

பீட்சா-வை விட ஆயா சுட்ட தோசையே மேல் என்பது போல், கார்ப்ரேட் பள்ளிகளை விட கட்டாந்தரை பள்ளிக்கூடமே மேல் என்பதை விளக்க வருகிறது ‘பற பற பற’ என்ற படம்.

Samayam Tamil 27 Sep 2018, 11:27 am
பீட்சா சாப்பிட ஆசைப்படும் 2 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காக்கா முட்டை, தேசிய விருது பெற்ற இந்த படம், இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதே பாணியில் 2 சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க வைத்து, மேலும் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘பற பற பற’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
Samayam Tamil kakka muttai


இதில், காளி வெங்கட், மைம் கோபி, முனீஷ்காந்த், ராமதாஸ் ஆகியோருடன் மாஸ்டர் கோகுல், மாஸ்டர் மதன் என்ற 2 சிறுவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தை பாரதி பாலா இயக்கியுள்ளார், ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். நிகில் ஜெயின், ரஞ்சித் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள்.
படம் குறித்து பேசிய இயக்குனர் பாரதி பாலா, ஒரு கிராமத்தில் கட்டாந்தரை பள்ளிக்கூடத்தில் படிக்கும் 2 சிறுவர்கள், நகரத்தில் உள்ள பள்ளில் சேர்ந்து படிக்கும் அனுபவமே கதைக்களம் என்கிறார். குழந்தைகளுடன் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து ரசித்து பார்க்கும் கலகலப்பான படம், இது. சிறுவர்கள் இருவருக்கும் சென்னையில் இலவசமாக படிக்கும் வாய்ப்பு எப்படி கிடைக்கிறது? என்பதில் அரசியல் இருக்கிறது என்றும் அது திரையில் தெரிந்துகொள்ளுங்கள் என்கிறார் இயக்குனர் பாரதி பாலா..

அடுத்த செய்தி

டிரெண்டிங்