ஆப்நகரம்

கொடூர வில்லனாக நடித்தவர் ஹீரோவாக அவதாரம்!

‘தாரை தப்பட்டை’ படத்தில் கொடூர வில்லனாக நடித்த தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

TOI Contributor 7 Sep 2016, 4:29 pm
‘தாரை தப்பட்டை’ படத்தில் கொடூர வில்லனாக நடித்த தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
Samayam Tamil villain r k suresh turns as hero
கொடூர வில்லனாக நடித்தவர் ஹீரோவாக அவதாரம்!


தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அதிலும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அவருடைய யதார்த்தமான நடிப்பு பலர் பாராட்டையும் பெற்றது. அதைடுத்து ‘மருது’ படத்திலும் நடித்துள்ளார். அவர் ஸ்டூடியோ 9 என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களையும் தயாரித்துள்ளார். இவர் நிறுவனம் கடைசியாக தயாரித்த படம் ‘தர்மதுரை’. இந்தப் படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

ஆர்.கே.சுரேஷ் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தொடர்ந்து வில்லனாக நடிப்பார் என்ற நிலையிலிருந்து சற்று மாறி தற்போது புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இன்று பூஜையுடன் இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும், படத்தில் நடிக்கும் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு நிர்வாகம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்