ஆப்நகரம்

வில்லன் வம்சிகிருஷ்ணாவுக்கு ஜோடியாகிறார் அகிலா!

​ ‘கர்ஜனை’ படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் வம்சி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை அகிலா.

TNN 21 Dec 2016, 6:58 pm
‘கர்ஜனை’ படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் வம்சி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை அகிலா.
Samayam Tamil villan vamsi krisha jodi akila
வில்லன் வம்சிகிருஷ்ணாவுக்கு ஜோடியாகிறார் அகிலா!


இயக்குனர் சுந்தர் பி. இயக்கத்தில் உருவாகும் படம் ‘கர்ஜனை’. இவர் ஏற்கெனவே ‘நாயகி’, ‘மோகினி’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது இவர் திரிஷாவை வைத்து ‘கர்ஜனை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷாவுடன் மோதும் அதிரடி வில்லனாக தெலுங்கு நடிகர் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சீரியல் நாயகி அகிலா நடித்து வருகிறார்.

இந்தப் படம் நாயகி அகிலா கூறியதாவது: நான் அறிமுகமானது முதலில் சின்னத்திரையில்தான். ‘தாமரை’, ‘இனி இனிய தோழியே’, ‘பொன்னூஞ்சல்’, ‘தேவதை’, ‘ராமானுஜம்’ போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளேன். தற்போது ராஜ் டிவியில் ‘ஷ்யாமளா’ -என்ற தொடரில் லீடு ரோலில் நடித்து வருகிறேன்.

இதுதவிர சினிமாவிலும் ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது ‘கர்ஜனை’ படத்தில் வில்லனாக நடிக்கும் வம்சி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இந்த படத்தில் குறைவான காட்சிகளில் நடித்திருந்தபோதும், கவனிக்கப்படும் வேடத்தில் நடித்திருக்கிறேன். அதனால் இந்த கர்ஜனை படத்திற்கு பிறகு எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார் அகிலா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்