ஆப்நகரம்

பிரபல நடிகையின் தயாரிப்பில் நடிகர் விமல்!

பிரபல நடிகை சர்மிளா மந்த்ரே தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் விமல் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 20 Jul 2018, 6:04 pm
பிரபல நடிகை சர்மிளா மந்த்ரே தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் விமல் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
Samayam Tamil sarmila vimal


கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை சர்மிளா மந்த்ரே. இவர் 2007ல் முதன் முறையாக கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் வெளியான ‘ஜோடி’ படத்தின் கன்னட ரீமேக்கான ‘சாஜினி’ என்ற படத்தில் நடிததுள்ளார். இந்தப் படத்தை முருகேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

தற்போது நடிகை சர்மிளா மந்த்ரே, தமிழில் ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தையும் முருகேஷ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஹீரோவாக விமல் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷ்னா ஜவேரி நடிக்கிறார். மேலும் படத்தில் ஆனந்த்ராஜ், சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் ‘நெற்றிக்கண்’ மற்றும் ‘மன்மதலீலை’ ஆகிய படங்களை போன்று பெண்கள் மீது மோகம் கொண்ட சபலபுத்தி கொண்ட ஒரு இளைஞனின் கதை படமாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்