ஆப்நகரம்

Rajalakshmi about Viruman:அதிதியை நினைச்சா தான் வருத்தமா இருக்கு: விட்டுக் கொடுக்காத பாடகி ராஜலட்சுமி

விருமன் பட பாடல் விவகாரம் குறித்து ராஜலட்சுமி கூறியதை கேட்டு ரசிகர்கள் அவரை பாராட்டுகிறார்கள்.

Samayam Tamil 10 Aug 2022, 1:26 pm
விருமன் பட பாடல் சர்ச்சை தொடர்பாக பெருந்தன்மையாக நடந்திருக்கிறார் பாடகி ராஜலட்சுமி.
Samayam Tamil viruman song issue rajalakshmi wins hearts
Rajalakshmi about Viruman:அதிதியை நினைச்சா தான் வருத்தமா இருக்கு: விட்டுக் கொடுக்காத பாடகி ராஜலட்சுமி



விருமன்

கார்த்தி நடித்திருக்கும் விருமன் படத்தில் வரும் மதுரவீரன் பாடலை சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியை வைத்து தான் யுவன் ஷங்கர் ராஜா பாட வைத்திருக்கிறார். பின்னர் அதே பாடலை அதிதி ஷங்கரை பாட வைத்து அவர் குரலில் வெளியிட்டார். இதை பார்த்தவர்கள் அதிதி ஒரு வாரிசு நடிகை என்பதால் ராஜலட்சுமியை ஓரங்கட்டுவதா என விமர்சிக்கிறார்கள்.

ராஜலட்சுமி

மதுரவீரன் குறித்து ராஜலட்சுமி கூறியிருப்பதாவது, யுவன் சார் இசையில் பாடியதே போதும். எனக்கு பதில் அதிதி ஷங்கரை பாட வைத்ததில் வருத்தமே இல்லை. அவங்க நல்ல பாடுறாங்க. அதனால் யுவன் சார் பாட வச்சிருக்கிறார். அதில் சந்தோஷமே என்கிறார்.

நியாயம்

அதிதியால் என் வாய்ப்பு பறிபோய்விட்டதாகக் கூறி அவரை விமர்சிப்பது வருத்தமாக உள்ளது. எனக்கு நியாயம் கேட்கிறேன் என்று யாரும் அதிதியை விமர்சிக்கக் கூடாது. எனக்கு யார் மீதும் கோபமோ, வருத்தமோ இல்லை என்கிறார் ராஜலட்சுமி.

பெருந்தன்மை

ராஜலட்சுமி தெரிவித்ததை பார்த்த ரசிகர்களோ, மனதில் வருத்தம் இருந்தாலும் பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்கிறார். ஷங்கரின் மகள் என்பதால் அதிதியை பாட வைத்தது தவறு தான். இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்