ஆப்நகரம்

Chakra First Look மீண்டும் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷால்

விஷாலின் சக்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Nov 2019, 12:01 pm
விஷால்- சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. விஷால் இன்று தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாக தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். சக்ரா என்று பெயரிட்டுள்ள போஸ்டரை இயக்குநர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil Chakra First Look மீண்டும் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷால்
Chakra First Look மீண்டும் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷால்


Ratnakar தெறி பேபி... அசாமில் சக்க போடு போட்ட தெறி ரீமேக்

இந்த நிலையில் சக்ரா படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் டைட்டிலில், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மெடல் போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் லாரி ரிம்மை கையில் தூக்கி அடிப்பது போல் விஷால் மிரட்டுகிறார். ஆக்ஷன் படத்திலும் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சக்ரா படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்குகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ரெஜினா கசான்ட்ரா, மனோ பாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அது மட்டுமின்றி பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கிறார்.

சாதி- மத வெறியில் கொல்வது தொடர் கதையாகிவிட்டது- பா. ரஞ்சித்!

விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இது தவிர விஷால் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஆக மொத்தத்தில் விஷாலிடம் இருந்து அடுத்த ஆண்டு இரண்டு படங்களை எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்