ஆப்நகரம்

Radha Ravi Nayanthara Controversy: பெண்களை இழிவாக பேசிய உங்களுக்கு ரவி மட்டும் போதும், ராதா எதற்கு... விஷால் கடும் கண்டனம்

பெண்களை இழிவாக பேசிய உங்களுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கையில் கையெழுத்திடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது என ராதாரவி பேச்சு தொடர்பாக விஷால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 25 Mar 2019, 12:19 pm
பெண்களை இழிவாக பேசிய உங்களுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கையில் கையெழுத்திடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது என ராதாரவி பேச்சு தொடர்பாக விஷால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil Vishal radha ravi


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவான “கொலையுதிர் காலம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பான நிகழ்ச்சியில் நடிகரும், டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவர் குறித்து வராத செய்திகளே கிடையாது. பேயாகவும் நடிக்கிறார். சீதாவாகவும் நடிக்கிறார்.

நயன்தாரா குறித்து செக்ஸியாக, அறுவெறுக்கத்தக்க கருத்து தெரிவித்த ராதாரவி- Video

முன்பெல்லாம் சாமி வேடம் போட கே.ஆர்.விஜயாவை கூப்பிடுவார்கள். ஆனால் தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் படியாகவும் இருக்கிறார்கள். கூப்பிடும் படியாகவும் இருக்கிறார்கள்.

என் செல்லாக்குடியவா அசிங்கமா பேசுர... ராதாரவியை விளாசிய விக்னேஷ் சிவன்

நிலைமை அப்படி போய்விட்டது என்று அருவெருக்கத்தக்க வகையில் பேசியது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ராதாரவிக்கு விக்னேஷ் சிவன், ராதிகா, சின்மயி, வரலக்ஷ்மி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நயன்தாராவை இழிவுபடுத்திய ராதாரவி... அண்ணன் என்றும் பாராமல் விளாசிய ராதிகா

ராதாரவியின் பேசியது குறித்து நடிகர் சங்கம் என்ன செய்ய போகிறது என பலடும் அவரின் டுவிட்டர் கணக்கை டேக் செய்து கேள்வி கேட்டுவருகின்றனர்.


பெண்களை இழிவாக பேசிய உங்களுக்கு ரவி மட்டும் போதும், ராதா எதற்கு... விஷால் கடும் கண்டனம்

விஷால் டுவிட்:
இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால், “அன்புள்ள ராதாரவி சார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் உங்களுக்கு எதிரான கண்டன கடிதத்தில் கையெழுத்திடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அண்மையில் நீங்கள் நடிகைகள்,பெண்கள் தொடர்பாக வெளிப்படுத்திய பேச்சு முட்டாள்தனமானது. நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். கொஞ்சம் வளருங்கள் சார். இனிமேல் நீங்கள் உங்களை ரவி என்று மட்டும் அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா?” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்