ஆப்நகரம்

சன் டிவியில் விஷால் தொகுத்து வழங்கும் ‘சன் நாம் ஒருவர்’ நிகழ்ச்சி!

நடிகர் விஷால், சன் டிவியில் ‘சன் நாம் ஒருவர்’ என்ற புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

Samayam Tamil 29 Sep 2018, 3:50 pm
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் சன் டிவியில் ஒரு புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கான டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால்.
Samayam Tamil 1538135549-4085


அந்த டீசரில் ‘விதைத்தவன் தூங்கலாம், விதைகள் தூங்காது’. ‘அன்பை விதைப்போமா’ விரைவில் உங்கள் சன் டிவியில் விரைவில் எனக் கூறுகிறார் விஷால்.

இந்த நிகழ்ச்சி, இவை ஜெமினி டிவியில், நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கிய “மேமு சதம்” நிகழ்ச்சியின் தமிழ் வடிவம்.
விஷால் தொகுத்து வழங்கும் இதற்கு “சன் நாம் ஒருவர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் முதல் எபிசோடில், சமந்தா கலந்துகொண்டிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்