ஆப்நகரம்

விரைவில் புதிய அரசியல் கட்சி துவங்குகிறார் விஷால்?

நடிகர் விஷால் புதிய அரசியல் கட்சி துவங்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

TNN 4 Jun 2017, 4:06 pm
சென்னை : நடிகர் விஷால் புதிய அரசியல் கட்சி துவங்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
Samayam Tamil vishal may comes politics
விரைவில் புதிய அரசியல் கட்சி துவங்குகிறார் விஷால்?


பிரபல நடிகர் விஷால் நடிகர் சங்கம் தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் உள்ளிட்ட தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்தநிலையில் அவர் தமிழக அரசியலில் குதிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

நடிகர் விஷாலுக்கு சிறு வயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் அதிகாமாம். இதனால் தான் அவர் நடிக்க வந்த பிறகு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் அணியை உருவாகி போட்டியிட்டு தானும் தனது அணியையும் வெற்றி பெற வைத்தார்.

இந்தநிலையில் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது தன்னை ஒரு சிறந்த நிர்வாகியாக காட்டிக்கொள்ள முயல்வதாகவும், நடிகர் விஜயகாந்தை போல அவரும் விரைவில் புதிய அரசியல் கட்சியை துவங்க இருப்பதாகவும், அதற்கான மறைமுக வேலைகளில் அவர் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்