ஆப்நகரம்

Vishal Ayogya Teaser: எல்லாத்துக்கேமே காந்தி தான் சாட்சி: விஷாலின் அயோக்யா டீசர்!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2019, 7:33 pm
விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil visal


தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்கத்தின் பொருளாளரும், நடிகருமான விஷால், சண்டக்கோழி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கத்தில் அயோக்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். மேலும், சன்னி லியோன், கே எஸ் ரவிக்குமார், பார்த்திபன், பூஜா தேவரியா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

Also Read This: ’அயோக்யா’வாக ’டெம்பர்’ ரீமேக்; பூஜையுடன் விஷால் படப்பிடிப்பு தொடக்கம்!

Also Read This:விஷால் நடிக்கும் அயோக்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!


விஷாலின் 26 ஆவது படமாக உருவாகும் இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வந்த டெம்பர் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி, லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 1.17 நிமிடம் இருக்கும் இந்த டீசரில் எல்லாத்துக்குமே காந்தி தான் சாட்சி. நீதி, நியாயம்னு பேசிட்டு வரும் போலீசாக இல்லாமல், பணத்தை வசூல் செய்யும் அதிரடி போலீசாக நடித்துள்ளார். இந்த டீசரை வைத்து பார்க்கும் போது பார்த்திபன் தான் வில்லனாக வருகிறார். பார்த்திபனுக்கும், விஷாலுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்